டிஏபி வாய்க்காலை முறையாக பராமரிக்காத அதிகாரிகள் விவசாயிகளுக்கு நஷ்டம்
Tiruppur King 24x7 |3 Jan 2025 3:34 AM GMT
பிஏபி வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் வாழை, தென்னந்தோப்புக்குள் புகுந்த தண்ணீர் - அழுகும் அபாயத்தால் விவசாயிகள் கலக்கம்
பல்லடம் அருகில் உள்ள மாணிக்கபுரம் ஊராட்சி அம்மாபாளையம் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. அந்த பகுதியில் விவசாயிகள் ராமசாமி, மோகன்ராஜ், ரங்கசாமி ஆகியோர்களுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் வாழை மற்றும் தென்னை உள்ளிட்டவற்றை வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிஏபி வாய்க்கால் தண்ணீர் இவர்களது தோட்டத்திற்குள் புகுந்து வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியதாவது பி.ஏ.பி.பாசன வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர் எங்களது தோட்டத்துக்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களின் கீழே தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்கி நின்று தென்னை மரங்கள் பாதிப்பு அடைந்துள்ளது. வேர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் பல ஆண்டுகளாக பாதுகாத்து பராமரித்த தென்னை மரங்கள் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இது கடந்த சில வருடங்களாக தொடர்கதையாக நீடித்து வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு முறையும் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போது தோட்டத்திற்கு தண்ணீர் புகுவதால் பயிரிட்ட வாழை மற்றும் பயிர்கள் சேதம் அடைந்து லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறி தோட்டத்திற்குள் புகுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்
Next Story