பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆலோசனைக் கூட்டம்
Dindigul King 24x7 |3 Jan 2025 3:58 AM GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 6,84,683, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்ப அட்டைதாரர்கள் 946 என மொத்தம் 6,85,629 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த குடும்ப அட்டைதாரர்களக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக வரும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story