சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி
Salem King 24x7 |3 Jan 2025 4:05 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது 53). ரத்த பரிசோதனை நிலையம் வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story