தா பழூர் ஊராட்சிக்குட்பட்ட திட்டப் பணிகளையும் புதிய அங்கன்வாடி கட்டிடங்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்து திறந்து வைத்தார்
Ariyalur King 24x7 |3 Jan 2025 4:33 AM GMT
தா பழூர் ஊராட்சிக்குட்பட்ட திட்டப் பணிகளையும் புதிய அங்கன்வாடி கட்டிடங்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்து திறந்து வைத்தார்
அரியலூர், ஜன.3 - தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், பொற்பதிந்தநல்லூர் ஊராட்சி, அர்த்தனேரியில், MGNREGS திட்டம் 2020-2021-ன் கீழ்,ரூ 7.00 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்புவிழா,தா.பழூரில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 2025-ன் கீழ்,ரூ 6.50 இலட்சம் மதிப்பீட்டில்,தா.பழூர் காவல் நிலையம் எதிரில் பயணியர் நிழற்குடை, இடங்கண்ணி ஊராட்சி அண்ணங்காரன்பேட்டையில்,அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-2024-ன் கீழ்,ரூ 14.31இலட்சம் மதிப்பீட்டில்,புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்புவிழா,கோடாலிகருப்பூரில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 -2025-ன் கீழ்,ரூ 7.00 இலட்சம் மதிப்பீட்டில்,கோடாலிகருப்பூர் காலனியில்,சிறு பாலத்துடன் கூடிய சிமெண்ட் சாலை, உதயநத்தம் ஊராட்சி,கோடாலியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021 -2022-ன் கீழ்,ரூ 10.93 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டிடம் திறப்புவிழா, உதயநத்தம் ஊராட்சி, கண்டியங்கொல்லையில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025-ன் கீழ்,ரூ 11.82 இலட்சம் மதிப்பீட்டில்,செங்கால் ஓடைத்தெருவில், சிமெண்ட் சாலை, உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன் (வட்டார ஊராட்சி), பொய்யாமொழி (கிராம ஊராட்சி), அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் காந்திமதி,அலமேலுமங்கை,இளநிலை பொறியாளர் சரோஜினி,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா,ஊராட்சி மன்ற தலைவர்கள் தி.ராசாராம் (நாயகனைப்பிரியாள் ஊராட்சி), வி.கதிர்வேல்(தா.பழூர்),சுதா இளங்கோவன் (கோடாலிகருப்பூர் ஊராட்சி),ஷீலா இளங்கோவன் (இடங்கண்ணி),பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை,இந்துமதி நடராஜன்,அ.இராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் கோவி.சீனிவாசன், கண்ணதாசன்,மாவட்டஅணி துணை அமைப்பாளர்கள் KSR.கார்த்திக்கேயன், த.சம்பந்தம்,த.குணசீலன், வெ.பாலசுப்ரமணியன்,அ.தங்கபிரகாசம், எழிலரசி அர்ச்சுனன்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் மா.சங்கர் அவர்கள் ஏற்பாட்டில்,கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, எழுது பொருட்களை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ .க.சொ.க.கண்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,இருபால் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். .
Next Story