போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
Dindigul King 24x7 |3 Jan 2025 4:38 AM GMT
திண்டுக்கல் MVM அரசு மகளிர் கலை கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக போலீஸ் அக்கா என்ற திட்டத்தின் அடிப்படையில் இன்று MVM.அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகளுக்கு புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் தெரியப்படுத்தும் விதமாக போலீஸ் அக்கா திட்டத்தின் தொலைபேசி எண்ணை மாணவிகளுக்கு கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்தும், மாணவிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் ரகசியம் பாதுக்கப்படுவதுடன் இதுகுறித்து உடனடியாக துரித விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே எந்த தயக்கமும் இன்றி தகவல்களை தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story