அரசாணை வெளியீடு
Erode King 24x7 |3 Jan 2025 4:39 AM GMT
ஈரோடு மாநகராட்சி உடன் 4 பஞ்சாயத்துகள் இணைப்பு பெருந்துறை, கவுந்தபாடி புதிய நகராட்சியாக தரம் உயர்வு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் விரிவாக்கம், புதிய நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகள் குறித்த அறிவிப்பு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சியுடன் ஈரோடு யூனியலில் உள்ள கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளும், மொடக்குறிச்சி யூனியனில் உள்ள 46 புதூர், லக்காபுரம் ஆகிய பஞ்சாயத்துகளும் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெருந்துறை டவுன் பஞ்சாயத்து, பெருந்துறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கவுந்தப்பாடி பஞ்சாயத்துடன் சலங்கப்பாடி பாளையம் மற்றும் பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு புதிய நகராட்சியாக கவுந்தப்பாடி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டத்தை பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி உடன் பெருந்துறை, கவுந்தப்பாடி என 6 நகராட்சியாகிறது. பவானி நகராட்சியுடன் குருப்ப நாயக்கன்பாளையம் பஞ்சாயத்தும், கோபி நகராட்சி உடன் வெள்ளாள பாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளும், புஞ்சை புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூர், நொச்சிகுட்டை ஆகிய பஞ்சாயத்துகளும் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னிமலை யூனியனில் உள்ள முகாசி பிடாரியூர் பஞ்சாயத்து, புதிய டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தப்படுகிறது. அம்மாபேட்டை யூனியனில் உள்ள படவல் கால்வாய் பஞ்சாயத்து, அம்மாபேட்டை டவுன் பஞ்சாயத்துடனும், டி. என். பாளையம் யூனியனில் உள்ள அக்கரை கொடிவேரி பஞ்சாயத்து, பெரிய கொடிவேரி டவுன் பஞ்சாயத்துடனும் இணைக்கப்படுகிறது.
Next Story