அதிகாரிகள் தகவல்
Erode King 24x7 |3 Jan 2025 4:42 AM GMT
சுகாதாரமாக உணவு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 9,856 கடைகளில் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அப்போது ஆய்வு நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 9,856 கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. அதில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த 349 கடைகள் கண்டறியப்பட்டு, அக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்த 239 கடைகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 187 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 116 கடைகள் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டு இருக்கிறது. இவை தவிர தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டும் காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்தை புதுப்பிக்க கோரியும் மாவட்ட முழுவதும் 1162 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Next Story