திருச்செந்தூர், திருவைகுண்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்

திருச்செந்தூர், திருவைகுண்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்
திருச்செந்தூர், திருவைகுண்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்!
திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் புதிய திட்டப் பணிக்கு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 7 இடங்களில் பல்வேறு நிதித் திட்டங்களின் கீழ், புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை மீன்வளம்- மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நேற்று (02.01.2025) பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதன்படி, திருச்செந்தூர் மற்றும் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், அதாவது திருச்செந்தூர் நகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செந்தூர் பேருந்து நிலைய ஓடுதளம் மேம்பாட்டுப் பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கோவங்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.13.16 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினைத் திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், SFC நிதித் திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியினையும், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பழையகாயல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன் வாடி மையக் கட்டடத்தினையும், 15வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.8.70 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் பேரூர் ஊராட்சியில் RGSA நிதித் திட்டத்தின் கீழ் ரூ.22.57 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தினையும், பேரூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.13 இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும் திறந்து வைத்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக, திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், திருச்செந்தூர் – புன்னக்காயல் – நாலுமாவடி – சாத்தான்குளம் புதிய வழித்தடத்தில் ஒரு நகர்ப்புற பேருந்து சேவையினையும், உடன்குடி பேருந்து நிலையத்தில் உடன்குடி- சிறுநாடார்குடியிருப்பு – வேதக்கோட்டைவிளை – கொட்டங்காடு புதிய வழித்தடத்தில் ஒரு நகர்ப்புற பேருந்து சேவையினையும் மீன்வளம்- மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேற்கண்ட புதிய வழித்தடங்களில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா விடியல் பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்படத்தக்கது. இந்நிகழ்ச்சியில், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் நகர்மன்றத் தலைவர் சிவஆனந்தி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் பாலசிங், திருச்செந்தூர் நகர்மன்றத் துணைத்தலைவர் ஏ.பி.ரமேஷ், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஸ், தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் (த.அ.போ.க) பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், தூத்துக்குடி கோட்ட மேலாளர் ரமேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனியாண்டி (கோவங்காடு), செல்வக்குமார் (பழையகாயல்), ஈஸ்வரி (பேரூர்) உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story