கோவை: டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து -மாநகர காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு !

கோவை: டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்து -மாநகர காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு !
டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்துக்கு உள்ளான இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர் சந்திப்பு.
கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்கு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த கோவை மாநகர காவல் ஆணையாளர், டேங்கர் லாரியில் இருக்கும் கேஸ் அதிக பிரஷர் கொண்டிருப்பதால், மாற்றுப் பம்புகளை வைத்து அதிலிருந்து எரிவாயுவை வெளியேற்ற வேறு டேங்க் தேவைப்படுவதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தற்காலிகமாக, கேஸ் வெளியேறுவதை நிறுத்தி இருப்பதாகவும் கூறினார் தொடர்ந்து, டேங்கர் லாரியில் மொத்தம் எவ்வளவு டன் கேஸ் இருந்தது என்ற செய்தியாளர் கேள்விக்கு, மொத்தம் 18 டன் எல்பிஜி கேஸ் இருந்ததாக தெரிவித்துள்ளார், தற்பொழுது வரை எவ்வளவு கேஸ் வெளியேறியிருக்கிறது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய நிலவரம் வரை கணக்கிட முடியவில்லை என்றும், தற்பொழுது பிரஷரை கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும், சுற்றுப்புற பகுதிகளில் எவ்வளவு leakage இருக்கிறது என்பதை கணக்கிட்டு கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் கட்டுக்குள் இருப்பதாகவும். NDRF குழுவினரும் வந்து கொண்டிருப்பதாகவும், Evaporation ஆவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ட்ராபிக் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும், டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி பீளமேட்டில் இருக்கும் அவர்களுடைய LPG பிளான்டிற்கு எடுத்து செல்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.இதனுடைய டேங்கர் லாரி கவிழ்ந்த 500 மீட்டர் சுற்றளவிற்கு, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
Next Story