வேதாரண்யம் சட்டமன்ற மண்டல தலைவர்களுக்கான
Nagapattinam King 24x7 |3 Jan 2025 6:47 AM GMT
தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், பாரதிய ஜனதா கட்சியின் வேதாரண்யம் சட்டமன்றத்தில் உள்ள மண்டல தலைவர்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு ரகுநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது . தேர்தலில், மாவட்ட தேர்தல் அதிகாரியாக பேட்டை சிவா செயல்பட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை தேர்தல் அதிகாரி கோட்டூர் ராகவன், மாநில பாஜக பொதுச் செயலாளர்கள் வைரமுத்து, பானுச்சந்திரன், ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில், புதிதாக தேர்வு செய்யபட்ட மண்டல தலைவர்களை தேர்தல் அதிகாரி பேட்டை சிவா அறிவித்தார். வேதாரண்யம் நகர தலைவராக மணிகண்டன், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவராக நாகராஜன், வடக்கு ஒன்றிய தலைவராக தனுஷ்கோடி, தலைஞாயிறு ஒன்றிய தலைவராக மாதவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரி ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
Next Story