கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள்.

கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள்.
மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் - மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு இன்று (ஜன.3) அவரது 265வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருவுருவச்சிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.இராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல், மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . உடன் நகர் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story