விஜயகாந்த் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்
Virudhunagar King 24x7 |3 Jan 2025 7:11 AM GMT
விஜயகாந்த் உருவப்படத்திற்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்
விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்த பெண்கள் அருப்புக்கோட்டையில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு குடம் குடமாக பெண்கள் பாலாபிஷேகம் செய்தனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில் நகர தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேமுதிக விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் நத்தத்தப்பட்டி ராமர் பாண்டி தலைமையில் நகர செயலாளர் நவநீத கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி காளியம்மன் கோவிலிலிருந்து பெண்கள் 108 பால்குடம் எடுத்து வீதி உலாவாக சென்றனர். முன்னதாக பராசக்தி காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. எம்.எஸ்.ஆர் ரோடு, சின்னக்கடை வீதி உள்ளிட்ட வீதிகள் வழியாக பால்குட ஊர்வலம் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. அப்போது காந்தி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பால்குடம் சுமந்து வந்த பெண்கள் குடம் குடமாக விஜயகாந்த் திருவுருப்படத்திற்கு வரிசையாக பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவருக்கும் நகர தேமுதிக சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நகர ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story