சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒப்படைப்பு
நாகை மாவட்டம் சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 2025 -ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு, நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை சார்பில், பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய நல்லாசிரியர் ரா,பாலு தலைமையில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டு, ஒப்படைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக், நாகை நகராட்சி கவுன்சிலர் தியாகராஜன், பொறியாளர் பா.சௌந்தர் ராஜன், ஆலோசகர் சிக்கல் நாராயண மூர்த்தி சாமிகள், எலக்ட்ரீசியன் செய்யது அன்வர், பள்ளி மேலாண்மை குழு ஓருங்கிணைப்பாளர் சோமு, தலைவி மகேஸ்வரி, சு.சேகர், விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர் தமிழரசன், சௌந்தர்ராஜன்,விவசாயி சங்க நிர்வாகி ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் நல புதுவை மாநில பொருப்பாளரும், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளருமான பொறியாளர் மீராஉசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக் மற்றும் நிர்வாகிகள் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, பள்ளி தலைமை ஆசிரியர் பாலு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஒப்படைத்தனர். நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். முடிவில், பட்டதாரி தமிழாசிரியை ஆ.வைதேகி நன்றி கூறினார்.
Next Story