ஜோலார்பேட்டையில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது

ஜோலார்பேட்டையில் மிதிவண்டி போட்டி நடைபெற்றது
ஜோலார்பேட்டையிள் மாணவ மாணவியர் களுக்கு மிதிவண்டி போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மாவட்ட அளவில் மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட அளவில் மிதிவண்டி போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜோலார்பேட்டை பார்சம் பேட்டை ரயில்வே கேட் அருகில் நடைபெற்றது. இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர் 14 வயதுக்கு கீழ் 17 வயதுக்கு கீழ் 19 வயதுக்கு என மூன்று பிரிவாக ஆண்கள் பெண்களுக்கு மிதிவண்டி போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் வந்த மாணவ மாணவிகளை திருநெல்வேலியில் நடக்கும் மாநில போட்டிக்கு தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்சாண்டர், அருண் குமார், செந்தில்குமார், இளையபெருமாள், தண்டபாணி, வினோதினி, மற்றும் மாணவ மாணவிகள் காவல்துறையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story