பவானிசாகரில் அரசு பள்ளியின்ன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
Bhavanisagar King 24x7 |3 Jan 2025 8:14 AM GMT
பவானிசாகரில் அரசு பள்ளியின்ன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பவானிசாகரில் அரசு பள்ளியின்ன் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1974-79 ஆம் ஆண்டுகளில் படித்த மாணவ, மாணவிகள் 45 ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்டனர். பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஷாஷஹான் வரவேற்றார். ரமேஷ் விநாயகர் சரணம் பாடலை பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வந்து இருந்த அனைரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். கூட்டத்தில் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் கூடுதல் நண்பர்களோடு குடும்பத்தாருடன் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தவும், 2028-ஆம் ஆண்டு பொன் விழா ஆண்டாக கொண்டாடவும், தற்போது உள்ள ஆசிரியர்களான கந்தசாமி, முருகன், சண்முகம், சண்முகவேல், தேவதாஜ் ஆகியோரை அழைத்து மரியாதை செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் இறந்து போன ராமலிங்கம், பர்னபாசு, தண்டபாணி, பொன்னுசாமி, மயில்சாமி, நாகராஜ், சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, மற்றும் சின்னராஜ் ஆகியோர் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 52 நண்பர்களை தேடி கண்டுபிடித்தனர். இதில் சுமார் 21 பேர் பங்கேற்றனர். முடிவில் மரகதம் நன்றி கூறினார். இதற்கானஏற்பாடுகளை சண்முகமணி செய்திருந்தார்.
Next Story