பஞ்சப்பள்ளி அணையில் இருந்து ஆட்சித் தலைமையில் நீர் திறப்பு
Dharmapuri King 24x7 |3 Jan 2025 8:55 AM GMT
பாலக்கோடு அருகே அமைந்துள்ள சின்னாறு பஞ்சப்பள்ளி அணையில் இருந்து இன்று விவசாயிகளின் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட, பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி IAS, மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி ஆகியோர் இன்று (ஜன 3) விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் காலை தண்ணீர் திறந்து வைத்தனர். இதன் மூலம் 43 கிராமங்களுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story