சமுதாய கூடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

மதுரை மேலூர் அருகே புதிய சமுதாய கூடத்தை அதிமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021- 22 திட்டத்தின் கீழ் 24 லட்சம் மதிப்பீட்டில் பதினெட்டாங்குடி ஊராட்சி பட்டத்தரிசி அம்மன் கோவில் அருகே புதிய சமுதாயக்கூடத்தை இன்று (ஜன.3) மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ கா. தமிழரசன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வழங்கபட்டது. நிகழ்ச்சியில் பதினெட்டாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story