உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட விழா
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது தமிழ் தாய் வாழ்த்து உடன் விழா இனிதே தொடங்கியது நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சே .மகேஸ்வரி. வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. கற்பகவல்லி தலைமை உரை வழங்கினார். மாணவியர்களுக்கு ஆளுமை திறன் மற்றும் சமூகப் பணி குறித்து எண்ணம்போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர். திரு. எஸ்.ஏ.ஐ நெல்சன் அவர்கள் சிறப்புரை நல்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு முதல்வர் நினைவு பரிசினை வழங்கினார். நிறைவாக நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் சு. விஜயா அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டு பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Next Story





