ராமநாதபுரம் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்... சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், அதிக கனமழை மற்றும் இயற்கை இடர்பாடு களால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு 100 சதவீதம் முழு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்கவும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக ரூ.25 ஆயிரம் மற்றும் இழப்பீடாக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்கவும், ராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் முதுகுளத்தூர் பகுதியில் கடந்த 2023-24ம் ஆண்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் அழிவுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு முன்பு தமிழ்நாடு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம் எஸ் கே பாக்கியநாதன் தலைமையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், செந்தில் முன்னிலையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது கைகளில் சேதம் அடைந்த நெற் பயிர்களுடன் ஆர்பாட்டம் நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.. பின் தங்களது கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் ஒப்படைக்க பேரணியாக சென்றனர். பேரணியாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாய சங்க நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நிர்வாகிகளை மட்டும் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் சந்திக்க அனுமதி அளித்தனர். விவசாயிகளை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இன்னும் 15 நாட்களில் விவசாயிகளின் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். விவசாயத்தால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவித் தொகையை மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என அனைத்து தரப்பு பொதுமக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்
Next Story