தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

X
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தாராபுரம் நகர தொண்டரணி சார்பாக பொதுமக்களுக்கு ஆதரவற்றோர்களுக்கும் அன்னதான வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ் மற்றும் மாவட்ட தொண்டரணி தலைவர் சபரிநாதன் வழிகாட்டுதல்படி தாராபுரம் நகர தொண்டர் அணி தலைவர் நவமணி, துணைத்தலைவர் தாமோதரன், செயலாளர் கேசவன், துணைச்செயலாளர் இஸ்மாயில், இணைச்செயலாளர் கிஷோர் சுந்தரவடிவேல், பொருளாளர் விக்னேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் புதிதாக பொறுப்பேற்று கொண்டதற்கு முதியோர் இல்லத்திற்கு சென்று அன்னதானம் வழங்கினர். மேலும் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொண்டர் அணி செயலாளர் பாபு, மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் கவின், பொருளாளர் முரளி, நகர இளைஞரணி செயலாளர் அபுதாஹிர், தமிழக வெற்றிக் கழகம் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

