பரமத்தி வேலூரில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை.

X
Paramathi Velur King 24x7 |3 Jan 2025 9:18 PM ISTபரமத்தி வேலூரில் ஸ்டூடியோ உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜன.3- பரமத்திவேலூரில் மது அருந்தியதை மனைவி கண்டித்ததால்ஸ்டூடியோ உரிமை யாளர் தற்கொலை செய்து கொண்டார். பரமத்திவேலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகே சன் (வயது 40). இவர் சொந்த மாக போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்தார். இவ ரது மனைவி ஜமுனா (33). இவர்களுக்கு நிதீஷ் என்ற ஒரு மகனும், நித்தியஸ்ரீ என்ற ஒரு மகளும் உள்ளனர். முருகேச னும், ஜமுனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த 1-ந் தேதி மாலை ஜமுனா வீட்டில் இருந்த போது, போது கணவர் முருகேசனுக்கு போன் செய்து மது அருந்தி விட்டதாக கூறி உள்ளார் அப்போது எதற்காக இப்போது மது குடித்தீர்கள் என்று கூறி அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முருகேசன் தனது மகள் நித்திய ஸ்ரீயை கொஞ்சி விட்டு மீண்டும் வெளியே சென்று விட்டார். இந்நிலையில் ஜமுனாவிற்கு இவரது கணவரின் நண்பர் ஒருவர் போன் செய்து முருகேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் லும் உயி ருக்கு போராடிய முருகே சனை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காகசேர்த்துள் ளார். அங்கு வந்த ஜமுனா மேல்சிகிச்சைக்காக தனது கணவர் முருகேசனை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்று கொண்டிருந்தார். ஆனால் செல்லும் வழியிலேயே உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப் பட்டதால் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். . தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
