கீழப்பாவூர் கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள் அளிப்பு வழங்கினார்

கீழப்பாவூர் கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள் அளிப்பு வழங்கினார்
கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வண்டிகள் அளிப்பு வழங்கினார்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிக்காக 71 மின்கல வண்டிகள் வழங்கப்பட்டது. தூய்மை பாரத இயக்க பகுதி 2 திட்டத்தின்கீழ் அரியப்பபுரம் ஊராட்சிக்கு 4, ஆவுடையானூா் 7, குணராமநல்லூா் 2, இடையா்தவணை 2, கல்லூரணி 9, கழுநீா்குளம் 1, குலசேகரப்பட்டி 14, மேலப்பாவூா் 3, பெத்தநாடாா்பட்டி 8, பூலாங்குளம் 4, ராஜகோபாலபேரி 3, சிவநாடானூா் 5, திப்பணம்பட்டி 5, வீ.கே.புதூா்4 என ரூ.1 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 71 மின்கல வாகனங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ் தலைமை வகித்தாா். கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி, ஊராட்சி மன்ற தலைவா்களிடம் மின்கல வாகனங்களை வழங்கினாா். திமுக ஒன்றிய செயலா் சீனித்துரை, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராம.உதயசூரியன், தா்மராஜ், ஊராட்சி மன்ற தலைவா்கள் துணைத் தலைவா்கள் கலந்து கொண்டனா். வட்டார ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன் நன்றிகூறினாா்.
Next Story