கார் கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்.

கார் கவிழ்ந்ததில் மூவர் படுகாயம்.
மதுரை திருமங்கலத்தில் கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் படுகாயம் அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு நேற்று ( ஜன.3)காரில் பெங்களூருவுக்கு பெற்றோர், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்டார். இவர் திருமங்கலம் விருதுநகர் 4 வழிச்சாலையில் உசிலம்பட்டி ரோடு சந்திப்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஜார்ஜ் (35), இவரது தந்தை ஜெபசுதன் (70), தாயார் டெய்சி (65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மனைவி மற்றும் குழந்தைகள் சிறு காயங்களோடு தப்பினர். இந்த விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story