உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு மருத்துவர்கள் மரியாதை
Dharmapuri King 24x7 |4 Jan 2025 2:10 AM GMT
மூளை சாவு அடைந்த தொழிலாளியின் சிறுநீரகம், கண்கள், இதயம் தர்மபுரி அரசு மருத்துவமனை தானம்-மருத்துவர்கள் மாணவ மாணவிகள் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை.
தருமபுரி அடுத்த அதகப்பாடி கிராமத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர் டைலரிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் 01.01.25 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகேசனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மூளைச்சாவு ஏற்பட்டு, முருகேசன் சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் குணமடைய வாய்ப்பில்லை என்பதால், முருகேசனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க குடும்பத்தினர் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று முருகேசனின் இரண்டு கண்கள், சிறுநீரகம் மற்றும் இதயத்தினை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்து, சேலம், கோயம்புத்தூர், சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முருகேசனின் உடலுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் கடந்த ஓராண்டுகளில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதில், அதிக உடல் உறுப்புகள் தானம் பெற்று, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story