சாலை மறியல் செய்த பொதுமக்கள் கைது
Dharmapuri King 24x7 |4 Jan 2025 2:22 AM GMT
தடங்கம் பகுதியில் தடங்கம் கிராம ஊராட்சியை, தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிடக்கோரி, மகளிர் சாலை மறியல் போராட்டம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட தடங்கம் கிராம ஊராட்சியை, தருமபுரி நகராட்சியுடன் இணைக்க, கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தருமபுரி நகராட்சியுடன், தடங்கம் கிராம ஊராட்சியை இணைத்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலை வாய்ப்பு இழக்க நேரிடுவதுடன், அந்த வேலைவாய்ப்பை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தடங்கம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட சம்மந்தப்பட்ட வேலை வாய்ப்பு திட்ட மகளிர் ஒன்றிணைந்து, நேற்று மாலை தங்கள் கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பாதை தமிழக அரசு கைவிடக்கோரி,தடங்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்புள்ள, பழைய அதியமான் பைபாஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மகளிரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கை குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாடி மனு வழங்கி கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என கூறினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத பெண்கள் மீண்டும் அதியமான் பழைய பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story