கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கடைசி கூட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து ஆதரவற்ற ஏழை மாணவர்கள் கல்வி உணவுக்கு காலனியை துடைத்து நிதி திரட்டிய உதவி பேராசிரியரின் பணி நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து ஆதரவற்ற ஏழை மாணவர்கள் கல்வி உணவுக்கு காலனியை துடைத்து நிதி திரட்டிய உதவி பேராசிரியரின் பணி நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கடைசி கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சிவகுமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது அப்போது ஒன்றிய கவுன்சிலர்களின் சேவைகளை பாராட்டி நினைவு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர் அப்போது ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக நான் உங்களின் செருப்பினை துடைக்கின்றேன் நீங்கள் அவர்களின் கண்ணீரைத் துடையுங்கள் என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த டாக்டர் செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் இவர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து உழைக்க வாய்ப்பு கொடுங்கள் உழைப்பிற்கு ஊதியம் தாருங்கள் என்கிற வாசகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் வந்த ஒன்றிய கவுன்சிலர்கள் ஊழியர்கள் அனைவரின் காலணிகளை சுத்தம் செய்து நிதியை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து 21 வது ஆண்டாக ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களின் மதிய உணவுக்காகவும் கல்லூரிக்கு பணிக்கு செல்லாத விடுமுறை நாட்களில் காலணிகளை துடைத்து நிதி திரட்டும் பணியில் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
Next Story