இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி நூலிழையில் உயிர் தப்பிய வாலிபர்
Thanjavur King 24x7 |4 Jan 2025 5:09 AM GMT
விபத்து
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருந்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசுப் பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தச்சசசது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். அப்போது, பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டையில், அப்பகுதியை சேர்ந்த பரத் (25), என்ற இளைஞர், தனியார் பேருந்தில் ஏறுவதற்காக வழிமறித்து நிறுத்தியுள்ளார். வேகமாக வந்து கொண்டு இருந்த தனியார் பேருந்து ஓட்டுநர், திடீரென பேருந்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், பின்னால் வந்த அரசுப் பேருந்து, தனியார் பேருந்தின் மீது மோதாமல் இருக்க, இடது புறம் திருப்பியுள்ளார். இதனால் தனியார் பேருந்தில் ஏற முயன்ற பரத் தடுமாறி இரண்டு பேருந்துகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு கீழே விழுந்தார். இதில் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இதில், வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென அலட்சியமாக, பேருந்தை சாலையில் நிறுத்தியதால், பின்னால் வந்த அரசுப் பேருந்து, தனியார் பேருந்து மீது மோதாமல் இருக்க இடதுபுறம் திருப்பியதால் பெரும் விபத்து அப்பகுதியினர் தெரிவித்தனர். மேலும், இளைஞர் விழுந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story