குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
மறியல்
திருக்கோவிலூர், சந்தப்பேட்டை காவேரி சந்து பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, காவேரி சந்து பகுதிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றில் போடப்பட்ட பைப் லைன் அடித்துச் செல்லப்பட்டது.இதனால் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு டிராக்டர் மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்திருந்தது.எனினும் இது போதுமானதாக இல்லை என்றும், ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக கூறி, அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் தீயணைப்பு நிலையம் அருகே மதியம் 12:20 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து மறியல் 12.35 மணியளவில் விலகிக் கொள்ளப்பட்டது.சாலை மறியல் காரணமாக சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story