கன்னியாகுமாரி மீனவர்கள் கலெக்டரிடம் மனு
Nagercoil King 24x7 |4 Jan 2025 5:40 AM GMT
பேரூராட்சியாக தொடர வேண்டும்
கன்னியாகுமாரி, சின்னமட்டம் பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் மற்றும் பங்கு பணியாளர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மீனவர்கள் குறைத்திருக்கும் கூட்டத்திலிருந்த கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:- கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தர உயர்த்தி முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 31ஆம் தேதி அறிவித்தார். நகராட்சியாக மாற்றும் பட்சத்தில் வரிவிதிப்பு அதிகரிக்கும். நாங்கள் போதிய வருமானம் இல்லாமல் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளோம். இதனால் எங்களுக்கு நிதி சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. எங்களுக்கு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள பிரதிநிதித்துவம் நகராட்சியாகும் போது நடை தடை வர வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி பேரூராட்சியில் மொத்த மக்கள் தொகையில் 60% மேல் உள்ள மீனவ மக்களின் விருப்பத்தை கணக்கில் கொண்டு, பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் கைவிட வேண்டும். சிறப்பு பேரூராட்சியாக நீட்டிப்பு செய்திட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
Next Story