கன்னியாகுமரி நகராட்சியில் ஊராட்சிகள் இணைப்பு இல்லை

கன்னியாகுமரி நகராட்சியில் ஊராட்சிகள்  இணைப்பு இல்லை
கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கினார். அப்போது மீனவர்கள் தரப்பில் கன்னியாகுமரியை  நகராட்சியாக மாற்றியது குறித்தும், அருகில் உள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பாக கலெக்டர் பதில் அளித்து பேசியதாவது:-         கன்னியாகுமரி பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதில் எந்த பேரூராட்சி, ஊராட்சிகளையும்  நகராட்சியுடன் இணைப்பதாக அரசாணை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே அமைச்சர்களும் குமரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பிரதிகளும் இந்த பிரச்சினை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தவறான தகவலை பரப்ப கூடாது.         மக்கள் நலனுக்காகவே அரசு உள்ளது. கன்னியாகுமரி பேரூராட்சி உடன் எந்த ஊராட்சிகளையும் தற்போது இணைக்கும் எண்ணம் இல்லை. மேலும் குளச்சல் நகராட்சியுடனும் சைமன் காலனி ஊராட்சி இணைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. கடற்கரை கிராமங்களை கிராம பஞ்சாயத்துகளாக அறிவிக்க கருத்துரு அனுப்பப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
Next Story