கும்பகோணம் மாடாக்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
Thanjavur King 24x7 |4 Jan 2025 5:59 AM GMT
போராட்டம்
தில்லையம்பூா் ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து கும்பகோணம் தெற்கு ஒன்றியம் மாடாக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலா் க.செ. முல்லைவளவன் தலைமை வகித்தாா், தெற்கு ஒன்றியச் செயலா் தென்னவன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் தில்லையம்பூா் ஊராட்சியில் உள்ள மகாகாளியம்மன் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் சிறுவன் இனியவன் (3) உயிரிழந்தாா். எனவே அக்குளத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வழக்குரைஞா்கள் சங்க மண்டலத் தலைவா் சா. விவேகானந்தன், கொள்கைப் பரப்பு துணைச் செயலா் செ. அரசாங்கம், மாநகர மாவட்டச் செயலா் சா.கோ. ராஜ்குமாா், கோவி.பகத்சிங் உள்ளிட்டோா் பேசினா். மாநில துணைச் செயலா் வழக்குரைஞா் எம். செந்தில்குமாா் வரவேற்று பேசினாா். எஸ்.வசந்த் நன்றி கூறினாா்.
Next Story