நாச்சியார்கோவில் அருகே தெப்பத்திருவிழா கொடியேற்றம்
Thanjavur King 24x7 |4 Jan 2025 6:02 AM GMT
திருவிழா
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. நாச்சியாா்கோவில் வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப்பெருமாள் கோயிலில் ஜன.2 முதல் 13 ஆம் தேதி வரை முக்கோடி தெப்பத்திருவிழா நடைபெறும். அதன்பேரில் வியாழக்கிழமை மாலை அங்குராா்ப்பணம், வெள்ளிக்கிழமை காலை கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு பெருமாளும், தாயாரும் சூரியபிரபையில் திருவீதி உலா வந்தனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் பா.பிரபாகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்தனா்
Next Story