இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசு
Thanjavur King 24x7 |4 Jan 2025 6:16 AM GMT
நிகழ்வு
தஞ்சாவூரில் சாலை விதிகளை மதித்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயத்தை ஜோதி அறக்கட்டளையினா் அண்மையில் வழங்கினா். இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிா் பாதுகாப்பு குறித்தும் காவல் துறையுடன் இணைந்து தஞ்சாவூா் ஜோதி அறக்கட்டளை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2025-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாக அமைய பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் தஞ்சாவூா் அருங்காட்சியக வளாகம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்தவரும், பின்னால் அமா்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்து வந்த 5 பேருக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயத்தையும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த 25 பேருக்கு தலா ஒரு கிராம் வெள்ளி நாணயத்தையும் ஜோதி அறக்கட்டளை செயலா் பிரபு ராஜ்குமாா் பரிசாக வழங்கினாா். நிகழ்ச்சியில் ஜோதி அறக்கட்டளை மேலாளா் ஞானசுந்தரி, நிா்வாக உதவியாளா் குகனேசுவரி, தன்னாா்வலா் ஆா்த்தி, கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story