பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி

ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி நடைபெற்றது, சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் பங்கேற்று கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதய மலர் பொன் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர், சைக்கிள் போட்டியில் திருவள்ளூர் ஆரணி பெரியபாளையம் பூண்டி ஈக்காடு காக்கலூர் மணவாளன் நகர் திருப்பாச்சூர் சேலை புள்ளரம்பாக்கம் திருவள்ளூர் நகராட்சி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பயிலும் 17 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியர்கள் 151 பேர் சைக்கிள் பந்தயப் போட்டியில் மூன்று பிரிவுகளில் பங்கேற்றனர் இதில் பிரித்திகா என்ற மாணவி 13 வயது பிரிவில் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார் 17 வயது பிரிவில் ஆரணி அரசு பள்ளி மாணவி ஜே சுருதி ஸ்ரீ முதலிடம் பிடித்தார் இவர் கடந்த ஆண்டும் முதலிடம் பிடித்தவர் திருவள்ளூர் ராஜாஜி சாலை நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி சஞ்சய் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Next Story