திருப்பத்தூரில் இலவச பியிற்ச்சி வகுப்பு திறப்புவிழா
Tirupathur King 24x7 |4 Jan 2025 7:33 AM GMT
திருப்பத்தூரில் அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை எம்எல்ஏ நல்லதம்பி துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கிவைத்தார் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுகக்கு அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நகர கழக செயலாளர் எஸ் ஆர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது அரசு வேலைவாய்ப்பு போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி துவக்கி வைத்தார் இந்த இலவச பயிற்சி வகுப்பிற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர் இந்த இலவச பயிற்சி வகுப்பினை முன்னதாக தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரிய ஆண்டினி ராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ்,மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story