மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டிகள் துவக்கம்

தர்மபுரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிதிவண்டி மாணவ மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி துவக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மிதிவண்டி போட்டியை இன்று ஜனவரி 04, தர்மபுரி - பென்னாகரம் சாலையில் நடத்தினர். இதில், தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி மற்றும் தர்மபுரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அதிகாரிகள் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தனர். இதில் வயது பிரிவின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Next Story