வாணியம்பாடி அருகே சாலை மறியல்

வாணியம்பாடி அருகே கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை சரி செய்ய கோரி சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தொழிற்சாலை கழிவுநீர் சாலையில் செல்வதால் நோய்தொற்று ஏற்றுபடுவதாகவும், உடனடியாக அதனை சரிசெய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.. திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 14 ஆவது வார்டு அண்ணாநகர் பகுதியில் முறையான அடிப்படை வசதிகள் இல்லையெனவும், மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து நகராட்சி கால்வாய் வழியாக வெளியேற்று வருவதாகவும், கடந்த சில தினங்களாக நகராட்சி கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதாகவும், மேலும் கழிவுநீரிலேயே குழந்தைகளுடன் நடந்து செல்வதால், பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர்.. அதனை தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்தனர்...
Next Story