வாசுதேவநல்லூரில் கட்டபொம்மன் படத்துக்கு மரியாதை
Sankarankoil King 24x7 |4 Jan 2025 7:51 AM GMT
கட்டபொம்மன் படத்துக்கு மரியாதை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை சாா்பில் கட்டபொம்மனின் 266ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மன் அறக்கட்டளை தலைவா் நாகராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவா் திருஞானம் , வாசுதேவநல்லூா் ஒன்றியக் குழு தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், நெல்கட்டும்செவல் ஊராட்சித் தலைவா் பாண்டியராஜா, மாநில காங்கிரஸ் பொது குழு உறுப்பினா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ, திமுக மாநில மருத்துவா் அணி துணை அமைப்பாளா் செண்பகவிநாயகம் ஆகியோா் கட்டபொம்மனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் ,மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி தலைவா் மணிகண்டன், மாவட்ட அவைத்தலைவா் பத்மநாதன், மாவட்ட திமுக துணை செயலா் மனோகரன் , நகர செயலா் ரூபி பாலசுப்பிரமணியன், மதிமுக நகர செயலா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் கட்டபொம்மன் , தமாகா நகரத் தலைவா் ஜீவானந்தம், தேமுதிக நகரச் செயலா் நாகராஜன், ராஜகம்பள நாயக்கா் சமுதாய நிா்வாகி நவநீதகிருஷ்ணன், கட்டபொம்மன் இளைஞா் அணி நிா்வாகிகள் தங்கமுனியாண்டி,முருகன், பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் . கட்டபொம்மன் அறக்கட்டளை செயலா் ராஜசேகரன் நன்றி கூறினாா்.
Next Story