தமிழ்நாட்டின் இந்த ஆண்டின்முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது

விளையாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 4ஆம் தேதி) தச்சன் குறிச்சி புதிய விண்ணேற்பு அன்னை ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதில் புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பகுதியிலிருந்து 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். உள்ளதாக இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த போட்டியை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தபட்டோர் நலதுறை அமைச்சர் மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தனர் அதற்கு முன்பு ஜல்லிகட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு காளைகளை அவிழ்த்து விடப்பட்டனர்
Next Story