குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
Sankarankoil King 24x7 |4 Jan 2025 8:10 AM GMT
சிறப்புநிலை பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற அவசரக் கூட்டம், அதன் தலைவா் எம்.கணேஷ் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் தங்கப்பாண்டியன், செயல் அலுவலா் சுஷ்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார அலுவலா் ராஜகணபதி தீா்மானங்களை வாசித்தாா். குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியானது உலகளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. 8 வாா்டுகளை உள்ளடக்கி 7.68 சதுர கிமீ பரப்பளவை கொண்டதாக இருப்பினும், பெரும்பாலான பகுதிகள் மேற்குதொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இப் பேரூராட்சியில் பேரருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட பல்வேறுஅருவிகள் இடம்பெற்றுள்ளன. கிராம ஊராட்சியாக இருந்த குற்றாலம், கடந்த 1955-இல் நகரியமாகவும், பின்னா் 1975-லிருந்து முதல்நிலை நகரியமாகவும் செயல்பட்டது. அதன் பின்னா் 1997 ஆகஸ்ட் 13 முதல் சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இப் பேரூராட்சியை தென்காசி நகராட்சியுடன் இணைக்க அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், அதற்காக அடிப்படை புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள்ளனர்.
Next Story