அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு!

அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி - ஆட்சியர் தொடங்கி வைப்பு!
காட்பாடியில் அண்ணா மிதிவண்டி போட்டியை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில், வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (04.01.2025) காட்பாடி பிரம்மபுரம் சிருஷ்டி பள்ளி அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி 1 வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story