நெற்களம் முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.

நெற்களம் முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.
நெற்களம் முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை.
மோகல்வாடி ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் அமைக்கப்பட்ட நெற்களம் நெற்களம் முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால் விவசாயிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மோகல்வாடி ஊராட்சியில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக 2024 -25 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் 8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நெல்களம் பொதுப்பணிக்கு சொந்தமான ஏரியில் அமைக்கப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக நெற்களம் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால் விவசாயிகள் விளைவித்த நெல்களை களத்தில் கொட்ட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பொதுமக்கள் வரிப்பணத்தினை அரசு அதிகாரிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த நெற்களம் அமைத்த ஒப்பந்ததாரர் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story