சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?

சேதமடைந்த சாலை சீரமைப்பது எப்போது?
லிங்காபுரத்தில் இருந்து தோண்டாங்குளம் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதிவாசிகள்கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் லிங்காபுரத்தில் இருந்து தோண்டாங்குளம் வழியாக தொள்ளாழி செல்லும் சாலை உள்ளது.தொள்ளாழி, தோண்டாங்குளம், உள்ளாவூர் உள்ளிட்ட கிராமவாசிகள்,இச்சாலையை பயன் படுத்தி தேவரியம்பாக்கம்மற்றும் வாரணவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், இச்சாலையில் விவசாய நிலங்கள் அதிகம்உள்ளதால், விவசாயப் பணி சார்ந்த வாகனங்கள் அதிகளவில் இயக்கப் படுகின்றன. இந்த சாலையில், லிங்காபுரம் அடுத்ததோண்டாங்குளம் வரையிலான 1 கி.மீ., சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. இதனால், இச்சாலைவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, லிங்காபுரத்தில் இருந்து தோண்டாங்குளம் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என, அப்பகுதிவாசிகள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Next Story