காஞ்சிபுரத்தில் நீர்நிலைகளில் எச்சரிக்கை பதாகை
Kanchipuram King 24x7 |4 Jan 2025 9:21 AM GMT
காஞ்சிபுரத்தில் நீர் நிலைகளில் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதாகை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கடம்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா, 55. இவர், தன் பேரப்பிள்ளைகளான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த தீபக், 15, வினிசியா, 9, ஆகியோருடன், கடந்த 28ம் தேதி வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு தடுப்பணையில் குளித்த போது, நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 'ஏரிகள் மற்றும் ஆற்று தடுப்பணைகளில் குளிக்க கூடாது' என, எச்சரிக்கை பதாகை அமைத்து, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து, ஒரு காவலர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை காண்பதற்காக, தாமல் ஏரியைசுற்றியுள்ள கிராமத்தினர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து, குளித்து விட்டு செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், உயிர்ப்பலி ஏற்படக்கூடாது என, பாலுச்செட்டிசத்திரம் போலீசார்எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர்.மேலும், ஒரு காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்.
Next Story