கடையம் அருகே அம்மி கல்லை போட்டு தாயை கொன்ற மகன் கைது
Sankarankoil King 24x7 |4 Jan 2025 9:23 AM GMT
அம்மி கல்லை போட்டு தாயை கொன்ற மகன் கைது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே கடையம் பகுதி உள்ள அருணாச்சலம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகவல்லி(45). இவரது மகன் அரவிந்தன் இதில் நேற்று இரவு அசந்து தூங்கும்போது கற்பகவல்லி தலையில் அம்மி கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை கண்ட பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது இதில் மகன் அரவிந்தன் தாய் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்ததாக தெரியவந்தது. இந்த நிலையில் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
Next Story