மாற்று திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இனட மாற்று திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் இன்று (4.01.25) மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும் மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையிலும் கொட்டாம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் சாந்தி ,ஆரோக்கியராஜ் ,அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது . உடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரிய கலா, கொட்டாம்பட்டி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரவி கணேஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் பாண்டி, பார்வதிபாய் , இந்திரா, டேவிட்ராஜ், மற்றும் இயன் முறை மருத்துவர்கள் கார்த்திகாதேவி கலந்து கொண்டனர். முகாமில் 115 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர் . இதில் 40 மாணவர்களுக்கு அடையாள அட்டை, 30 மாணவர்களுக்கு பஸ் இரயில் சலுகை கட்டண அட்டை, 18 மாணவர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை 3 செவித்துணை கருவி, 5 சக்கர நாற்காலி, 2 காளிப்பர் , மற்றும் கற்றல் உபகரணப்பெட்டி 20 நபர் தேவை என அளவீடு செய்யப்பட்டது.
Next Story