அரியலூர் அருகே இரட்டை பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

அரியலூர் அருகே இரட்டை பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.அளித்தார்
அரியலூர், ஜன, 4- அரியலூர் அருகே பெரியவளையத்தில் இரண்டு பெண்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி  கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (40) இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு  பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அந்த  கிராமத்தை சேர்ந்த கலைமணி மனைவி மலர்விழி (29) மற்றும் தண்டபாணி மனைவி கண்ணகி (40) ஆகியோர் காளான் பறித்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி கொண்டு பாய்ந்து இரண்டு பெண்களும் உயிரிழந்தனர் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து  பால்ராஜை இவ்வழக்கு குறித்த விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்வாலண்டினா  குற்றவாளி பால்ராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் குற்றவாளிக்கு 45 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்..
Next Story