திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு

திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு
திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு
திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த அபினவ் குமாா், ராமநாதபுரம் காவல் சரக துணைத் தலைவராக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பணியிடம் காலியாக இருந்து வந்தது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த வந்திதா பாண்டே, திண்டுக்கல் காவல் சரக துணைத் தலைவராக கடந்த சில நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், திண்டுக்கல் சரகத்தின் 2-ஆவது பெண் காவல் துறை துணைத் தலைவராக வந்திதா பாண்டே வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Next Story