விற்பனையாளர்கள் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு மிரட்டும் திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையை கண்டித்து ஏழாம் தேதி கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.

விற்பனையாளர்கள் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு மிரட்டும் திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையை கண்டித்து ஏழாம் தேதி கருப்பு சட்டை அணிந்து போராட்டம்.
X
தமிழக கூட்டுறவு சொசைட்டியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டும் விற்பனையாளர்கள் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு மிரட்டும் திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறையை கண்டித்து 7 ஆம் தேதி கருப்பு சட்டை அணிந்து மாவட்ட கலெக்டரிடம் மனு தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பா தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஜன.4- தமிழக கூட்டுறவு சொசைட்டியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக் காட்டும் விற்பனையாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு மிரட்டும் திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து வருகிற 7-ம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கருப்பு சட்டை அணிந்து பேரணி நடைபெற உள்ளது என ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் அமராவதி கூட்டுறவு சொசைட்டியில் வைப்பு நிதியில் உள்ள முறைகேடுகளை சுட்டிக் காட்டக்கூடிய பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அங்கு பணியாற்றக்கூடிய பணியாளரின் குடும்பத்தினர் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை பயமுறுத்துகிறது. இதைக் கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அதே போன்று ரேஷன் கடை செயல்படும் கட்டிடத்திற்கு பணியாளர்கள் வாடகை தர வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள், வெளிமார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விற்பதில் தனியார் நிர்வாகத்தினர் தலையீடு செய்து விற்பனையாளர்களை மிரட்டி வருகிறார்கள், அதன் மூலமாக கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு நிறுவனத்தை பயன்படுத்தி இதுகுறித்து நியாயம் கேட்ட பணியாளர் மீது கொலை மிரட்டல் ஏற்பட்டுள்ளது அவருடைய மகன் மீது பொய் கஞ்சா வழக்கு போடப்பட்டுள்ளது. அதே மாவட்டத்தில் வாங்குகிற சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட சங்கத்தில் சேரவில்லை என்ற காரணத்திற்காக நிர்வாகம் நிர்பந்தப்படுத்தி மாத சம்பளத்தை குறைத்து வழங்கக்கூடிய உத்தரவுகளை பெற்றுள்ளது. இப்படி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வருகிற 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு நியாயவிலைக் கடை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாநில சங்கங்களை அனைத்தும் இணைத்து மிகப் பெரிய அளவில் கவனயீர்ப்பு போராட்டம் தமிழக அரசை கண்டித்து நடத்த உள்ளோம் என்றார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு நியாய விலை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா காட்டுமன்னார்குடி வட்ட செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story