ராமநாதபுரம் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

X
தமிழக அரசு சார்பில் பரமக்குடியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது இதில் தமிழக முழுவதும் இருந்து 196 தொழில் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டன. சுயதொழில் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் தமிழக அரசு சார்பில் சுய தொழில் தொடங்குவதற்கான கடனுதவி, பயிற்சி குறித்த விழிப்புணர்வும் நடைபெற்றது. வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காளோன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தேர்வாகி பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story

